நள்ளிரவில் லாரியில் பற்றி எரிந்த தீ -ஓட்டுநர் உடல் கருகி பலி .

by Editor / 29-07-2024 09:40:07am
 நள்ளிரவில் லாரியில் பற்றி எரிந்த தீ -ஓட்டுநர் உடல் கருகி பலி .

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தடிகாரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்  ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (24),  இவர் டிப்பர் லாரி டிரைவரான இவர்,  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச் சாலையில் உள்ள தனியார் தார் கம்பெனியில் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் டிப்பர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு டிப்பர் லாரியில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த லாரியில் தீ பற்றி எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை என்பதால் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தது. மேலும் லாரியின் உள் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தது ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன் தூங்கும்போது கொசுக்காக பொருத்தி வைக்கப்பட்ட கொசுவத்தி சுருளில் இருந்து தீ‌ கனல் பரவி தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :  நள்ளிரவில் லாரியில் பற்றி எரிந்த தீ -ஓட்டுநர் உடல் கருகி பலி .

Share via

More stories