படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த பாஜக தலைவர் அண்ணாமலை உறவினர்கள் ஆவேசம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் 14 தனி படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அப்போது உயர்ந்தவர்களின் உறவினர் ஒருவர் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், குற்றவாளிகள் துணிகரமாக கொலைகளை செய்வதாகவும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இதுபோன்ற குற்றசம்பங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாகவும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தான் இது போன்ற குற்றச்சாம்பவங்கள் நடைபெற அடிப்படை காரணம் எனவும், தமிழக அரசு இதை கட்டுப்படுத்துமா படுத்தாதா எனவும், அரசாங்கம் போதை பொருள் புழக்கத்தை நிறுத்தாவிட்டால் அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம் எனவும் ஆவேசமாக தெரிவித்தார். சாலையில் நடக்க முடியவில்லை எனவும் வருபவர்கள் நல்லவர்களா... கெட்டவர்களா... என்ற சந்தேகம் எழுவதாகவும், திராவிட தீவிரவாதம் நடைபெற்று வருவதாகவும், காவல்துறை உயிரைக் கொடுத்து பணியாற்றி வருவதாக அண்ணாமலை தெரிவித்ததும், இன்னும் நாங்கள் எத்தனை உயிர்களை கொடுப்பது என கேள்வி எழுப்பினார். ஆவேசமாக பேசிய உறவினரை அண்ணாமலை சமாதானப்படுத்தினார்.
Tags : படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த பாஜக தலைவர் அண்ணாமலை உறவினர்கள் ஆவேசம்.