பள்ளி மாணவி குட்டையில் விழுந்து பலி

by Staff / 17-01-2023 02:36:48pm
பள்ளி மாணவி குட்டையில் விழுந்து பலி

இளம்பிள்ளையை அடுத்த வேலகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கோபால் மகள் ஜெயந்தி (14).
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். 15-ஆம் தேதி நள்ளிரவில் இருந்து மாணவியைக் காணவில்லை என பெற்றோா்கள் அக்கம், பக்கம் தேடியும் கிடைக்காததால் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.இந்நிலையில் கோபால் வீட்டு அருகே உள்ள குட்டையில் ஜெயந்தி திங்கட்கிழமை மாலை சடலமாக மிதந்தாா். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

 

Tags :

Share via
Logo