இலங்கையில் வடிவேலு பாணியில் போராட்டம்..

by Staff / 16-01-2023 12:03:20pm
இலங்கையில் வடிவேலு பாணியில் போராட்டம்..

இலங்கையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள யாழ்பாணத்திற்கு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே வருகை தந்தார். அப்போது தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட பல பல கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட நிலையில், அதில் சிலர் ஷாம்பூ போட்டு வடிவேலு பாணியில் குளிக்க தொடங்கினர்.
 

 

Tags :

Share via

More stories