விஷச்சாராய சம்பவம் - 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

by Staff / 27-06-2024 04:41:06pm
விஷச்சாராய சம்பவம் - 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, கதிரவன், கண்ணன், சக்திவேல், சிவகுமார், பன்சிலால், கவுதம் ஆகிய 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்தனர்.
 

 

Tags :

Share via

More stories