ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்

by Staff / 27-06-2024 04:47:42pm
ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து கொத்தனூர் வழியாக அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில் பயணித்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி, மூதாட்டி ஒருவரை பிரசவம் பார்க்க கூறினார். அப்போது, பேருந்திலேயே அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 

Tags :

Share via