டிரான்ஸ்பார்மரில் பீஸ் கேரியர் மாற்ற ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (45). இவர் 15 வருடமாக மின்சார வாரியத்தில் ஆலங்குளம் அருகே கிடாரகுளம் என்ற ஊரில் வயர்மேனாக உள்ளார். இன்று காலை குறிப்பன்குளத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் போனதால் , அதை மாற்றுவதற்கு ராமநாதன் சென்றுள்ளார். டிரான்ஸ்பார்மரை அனைத்து (off) விட்டு மேலே ஏறி பீஸ் கேரியரை மாற்றும் போது வயரில் கரண்ட் இருந்துள்ளது. இதை அறியாத ராமநாதன் வயரில் இருந்து கரண்ட் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags : டிரான்ஸ்பார்மரில் பீஸ் கேரியர் மாற்ற ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி++