நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவு மலரை தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் வெளியிட்டார்
நாகூர் இ எம் ஹனிபா நூற்றாண்டு விழாவை பற்றி இன்று கலைவாணர் கலையரங்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,நாகூர் ஹனிபா பாடல்கள் முழு தொகுதி மற்றும் நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவு மலரை தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி பெற்றுக்கொண்டார். இசை துறையில் இருக்கும் இசைவாணர்களுக்கு இசை முரசு நாகூர் ஹனிபா பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.. முதலமைச்சர், நாகூர் ஹனிபாவிற்கும் முன்னாள் முதல்வர் கலைஞருக்கும் இடையேயான நட்பை விரிவுபட பேசினார். டிசம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாகூர் அனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்காவை திறந்து வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :

















