பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து வரும் மதி உணவு திருவிழா டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து வரும் மதி உணவு திருவிழா டிசம்பர் 24வுடன் முடிவடைந்ததாக இருந்த நிலையில் தற்பொழுது ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பெரும் வரவேற்பை தொடர்ந்து இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும் மதியம் 12.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை எங்கு 38 மாவட்டங்களைச் சேர்ந்த 235 க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை கொண்ட கடைகளில் உணவு விற்பனை செய்யப்படும். 38 உணவு கடைகள் மற்றும் 12 சிறப்பு அங்காடிகள் மகளிர் செய்வது குழுக்களால் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் பிரியாணி, விருதுநகர் பரோட்டா, கடலூர் மீன் புட்டு ,ஆம்பூர் பிரியாணி மற்றும் சிறுதானிய உணவுகள் போன்றவை இங்கு அனைவரும் கவனத்தை ஈர்த்த உணவாகும். மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு கட்டணம் இன்றி அனைவரும் இதில் பங்கேற்கும் நிலையில் இருப்பதால், அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு மக்கள் குடும்பத்துடன் வந்து உணவுகளை உண்டு மகிழ ..பொழுது போக்க ஏதுவாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :

















