ஐஜேகேவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஜி.ராஜன் நியமனம்

இந்திய ஜனநாயக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஜி.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐஜேகே பொதுச் செயலாளர் பதவியை பி.ஜெயசீலன் சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார். பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் அருண் நேருவிடம் தோல்வியடைந்தார்.
Tags :