இன்று எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள்- சென்னை மெரினா கடற்கரையில் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை
இன்று எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் தொண்டர்கள் என அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து வந்து எம்ஜிஆர் க்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்து நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க பாடுபடுவோம் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் பொற்கால அத்தியாயம் எம்ஜிஆர் என்றும் ஏழை எளிய மக்களின் துயரத்தை துடைத்தவர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டதோடு தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியை வீழ்த்தி எம்ஜிஆர் காட்டிய பாதையில் மக்கள் பணியாற்றுவோம்என்று குறிப்பிட்டார்.
Tags :

















