எதிர்க்கட்சியினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகசெந்தில் பாலாஜி விளங்குவதாக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்,
கோவையில் நடைபெற்ற திமுக மேற்கு மண்டலம் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் அரசியல் ஆற்றல் மற்றும் செயல்பாடுகள் கோவையில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குவதாகவும் அவர்களின் தூக்கத்தை கெடுப்பதாகவும் குறிப்பிட்டார் .பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்தபோதிலும் அவர் எதற்கும் அடிபணியாமல் உறுதியுடன் நின்று கட்சி பணியாற்றுவதாக பாராட்டினார். செந்தில் பாலாஜி அனுபவித்ததைப் போன்ற துயரங்களை வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் என்று கூறிய முதலமைச்சர், அவரது கடின உழைப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Tags :


















