முறைகேட்டில் ஈடுபட்டால் ரூ.1 கோடி வரை அபராதம் - மசோதா தாக்கல்
போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களை தண்டிக்கும் நோக்கிலும், கேள்வித்தாள் கசிவு போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மக்களவையில் பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டமாக மாறியதும், அதன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :