சிவாஜி கணேசன் பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் மரியாதை

by Staff / 01-10-2023 01:06:46pm
சிவாஜி கணேசன் பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துள்ளார். மேலும், மணிமண்டபத்தில் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், 'பராசக்தி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவாஜி, 'கர்ணன்', 'திருவிளையாடல்', 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'மனோகரா', 'அன்னையின் ஆணை', 'அன்பு', 'இரத்ததிலகம்' என பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo