குட் பேட் அக்லி  திரைப்படத்திற்கு 100 அடி உயரத்திற்கு கட்டவுட் -அஜித் ரசிகர்கள்.

by Editor / 10-04-2025 11:04:31am
 குட் பேட் அக்லி  திரைப்படத்திற்கு 100 அடி உயரத்திற்கு கட்டவுட் -அஜித் ரசிகர்கள்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஸ்குமார் இசையில் இன்று வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. 

இந்தப் படத்தின் டிரைலர், டீசர் ரசிகர் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளதை முன்னிட்டு திரைப்படத்திற்கு ஆன ரிசர்வேஷன் புக்கிங்களும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இன்று திரைப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கட்டவுட் வைத்து கொண்டாட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்கில் நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்னி திரைப்படம் இன்று வெளியாகிறது இந்த நிலையில் மதுரையில் அஜித் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகள் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் கட்டவுகள் வைத்து பால் அபிஷேகம் வைத்து அஜித் ரசிகர்கள் நடனமாடி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பகுதியாக பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில அமைந்துள்ள ஏ பி ஆர் திரையரங்கில் 100 அடிக்கு நடிகர் அஜித்தின் கட்டவுட் பேனரை வைத்தும் திரையரங்கம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 

 

Tags :  குட் பேட் அக்லி  திரைப்படத்திற்கு 100 அடி உயரத்திற்கு கட்டவுட் -அஜித் ரசிகர்கள்.

Share via