பாஜகவுடன் கூட்டணி தொடருமா? ராமதாஸ் பதில்

கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை கட்சியின் செயல் தலைவராக அறிவித்து உத்தரவிட்டார். கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே தொடருவதாகவும் அறிவித்தார். தொடர்ந்து பேசியவர், பாஜக - பாமக கூட்டணி விஷயம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
Tags :