கோயிலில் பற்றி எரிந்த தீ

by Staff / 30-03-2023 04:24:33pm
கோயிலில் பற்றி எரிந்த தீ

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சி செய்தனர். பக்தர்களை கோயிலை விட்டு வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிழலுக்காக போடப்பட்டிருந்த பனை ஓலையில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக கவனித்த பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் அனைவரையும் வெளியேற்றியதால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo