பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலைவி தி லீடர் என்ற புதிய அரசியல் இயக்கத்தின் பெயரை அறிவித்தார்.

by Admin / 05-06-2026 01:54:27pm
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலைவி தி லீடர் என்ற புதிய அரசியல் இயக்கத்தின் பெயரை அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து தனதுவி தி லீடர் என்ற புதிய அரசியல் இயக்கத்தின் பெயரை அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியாக பதவி வகித்தவர். 2019 பெங்களூர் நகர துணை ஆணையராக இருந்து உடன் பதவியை ராஜினாமா செய்து 2020இல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட ஓராண்டுக்குள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்று இருந்தார். சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்த அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து பாரதிய ஜனதாவிற்கு இளைஞர்கள் இடையே ஒரு வேகத்தை உருவாக்கி இருந்தார். இருப்பினும் கட்சி அவரை தலைவர் பதவியில் இருந்து இறக்கி நைனார். நாகேந்திரனை தலைவராக அமர்த்தியது. தொடர்ந்து அவர் கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்து வந்தவர். பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை சந்தித்தார். நேற்று அவருடைய பிறந்த நாளில் புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் என்று தன்னுடைய இயக்கத்தின் பெயரை அறிவித்துள்ளார். இணைய வழியாக உறுப்பினர் சேர்க்கை இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் 

 

Tags :

Share via
Logo