தென்காசி மாவட்ட பகுதியில் தொல்லியல் எச்சங்கள்  அகழாய்வு பணிகள் துவக்கம்.

by Editor / 18-06-2024 05:29:37pm
தென்காசி மாவட்ட பகுதியில் தொல்லியல் எச்சங்கள்  அகழாய்வு பணிகள் துவக்கம்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரபேரி கண்மாய்க்கு அருகே தொல்லியல் மேடு அமைந்துள்ளது. திருமலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் சாலை பணிக்காக மண் எடுக்கும் பொழுது ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் தெரியவந்துள்ளது.இந்த தொல்லியல் மேடானது சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், வெண்மை நிறத்தினாலான  அலங்கரிக்கப்பட்ட மண் கிண்ணங்கள்,மேலும் செம்பிலான கிண்ணம் இரும்பிலான ஈட்டி, வாள், குருவாள் போன்ற முக்கிய தொல்பொருளாகவும் கிடைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு பணியினை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். இந்த அகழாய்வு பணிகள் திருமலாபுரம் அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார் மற்றும் அகழாய்வு பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 

Tags : தென்காசி மாவட்ட பகுதியில் தொல்லியல் எச்சங்கள்  அகழாய்வு பணிகள் துவக்கம்.

Share via