எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சிநாள் பிரதமர் வாழ்த்து.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் படங்களை பதிவிட்டு வீரர்களின் தியாகத்தை போற்றி பதிவிட்டுள்ளார்.அதில்
எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அவர்களின் எழுச்சி நாளில் அன்பான வாழ்த்துக்கள்! தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய, BSF ஒரு முக்கியமான தற்காப்பு வரிசையாக உள்ளது. அவர்களின் விழிப்புணர்வும் தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்பிற்கும் பங்களிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
Tags : எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சிநாள் பிரதமர் வாழ்த்து.