ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

by Staff / 12-10-2022 05:28:33pm
ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி பாபு. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் சுஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வந்த ஹரிபாபு செங்கல்பட்டு- தாம்பரம் செல்லக்கூடிய ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனை கண்ட சக பயணிகள் செங்கல்பட்டு இரும்பு பாதை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, ரத்த வெள்ளத்தில் இருந்த ஹரிபாபு வை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், ஹரிபாபு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த கடிதத்தில், "சுஜி நான் எந்த தப்பும் பண்ணல உனக்கு இதுவரைக்கும் துரோகமும் பண்ணல. சாதனா/ தன்விகா சாரி டா செல்லம் உங்கள விட்டு அப்பா ரொம்ப தூரம் போர. என் சாவுக்கு காரணம் என் பொண்டாடியோட அம்மா தான் என் பொண்டாடி என் குழந்தைகளை அவங்க கூப்பிட்டு போய்ட்டாங்க. என்னுடைய கடைசி ஆசை என்னுடைய சொத்து என் மகள்களுக்கு செல்ல வேண்டும். போலீசார் எனக்கு உதவி பன்னுங்க, இந்த உலகில் வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை" என உருக்கமாக எழுதியுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo