கிணற்று தண்ணீரை குடித்த 2 பேர் பலி.. 30 பேர் கவலைக்கிடம்
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சஞ்சீவ ராவ்பேட்டையில் குடி தண்ணீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக அந்த கிராம மக்கள் அங்கிருந்த கிணற்று தண்ணீரை குடித்துள்ளனர். இதனால், பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், மகேஷ் (22) மற்றும் சாயம்மா (70) ஆகியோர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து அம்மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Tags :