‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்குமா?

by Editor / 05-06-2024 11:08:02am
‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்குமா?

’இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அவர் கூறும் போது, “மக்களவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் உழைப்பு சாதாரணமானது கிடையாது. மிக கடுமையாக பணியாற்றினார், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் திமுக வேட்பாளர்களை போல பாவித்து அவர் வாக்கு சேகரித்தார், ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழ்நாட்டில் எடுபடாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கும் மேல் கைவசம் வைத்திருப்பதால், இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்பது குறித்து கனிமொழி பதிலளித்திருக்கிறார். சென்னையில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகவும் இருக்கிறது. ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு என்ன முடிவு என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்” என்றார்.

 

Tags : ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்குமா?

Share via