141 பயணிகளுடன் சார்ஜாவை நோக்கி புறப்பட்ட விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது .

by Admin / 11-10-2024 09:36:31pm
 141 பயணிகளுடன் சார்ஜாவை நோக்கி புறப்பட்ட  விமானம்  வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது .

வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விமானம், விமானிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன..

 திருச்சி விமான நிலையத்தில் இருந்து 141 பயணிகளுடன் சார்ஜாவை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் முன் சக்கரமும் பின் சக்கரமும் உள்வாங்காமல் அப்படியே இருந்ததால் விமானத்தை தொடர்ந்து செலுத்த முடியாமல் விமானி கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்து... தற்பொழுது மிக புத்திசாலித்தனமாக விமானம் தரையிறக்கப்பட்டது. 141  விமான பயணிகளோடு விமானி உள்பட 144 பேர் பயணித்த விமானம் 5 40 மணியளவில் ஷார்ஜாவை நோக்கி புறப்பட்ட நிலையில், இது போன்ற கோளாறு உருவானதால், மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை..... திருச்சி விமான நிலையமும்  விமான ஆணையமும் தொடர்ந்து விமானத்தை தரையிறக்கும் முயற்சியில் தீவிர ஆலோசனை நிகழ்த்தி பின்னர்.... விமானியின் சாமர்த்தியமான செயலின் காரணமாக... இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.. ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து வளைகுடா நாட்டிற்கு தொழில் காரணமாக 141 பேர் சென்றனர். விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் சக்கர ஹைட்ராலிக் இயங்காததின் காரணமாக இந்த அசம்பாவிதமான சூழல் உருவானது. திறமைசாலியான விமானி சூழ்நிலையை சமயோசிதமாகசெயல்பட்டதன் காரணமாக விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானத்தில் எந்த விதமான அசம்பாத மிதமான செயல்களும் நிகழ்ந்து விடாமல் இருக்கும் பொருட்டு எரிபொருளை வெளியேற்ற உத்திராடப்பட்டிருக்கிறது. விமானம் தரை இறங்கியது பெரும் சவால் நிரம்பியதாகவே இருந்தது.. 141 பயணிகளின் உறவினர்கள் கதி கலங்கி என்ன நடக்குமோ என்கிற அச்சத்திலும் பதட்டத்திலுமே இருந்தவர்களுக்கு விமானத்திலிருந்து 144 பேரும் பத்திரமாக வந்தது எல்லோருக்கும் பெரும் நிம்மதியை தந்தது.

 141 பயணிகளுடன் சார்ஜாவை நோக்கி புறப்பட்ட  விமானம்  வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது .
 

Tags :

Share via