சபரிமலையில்  சித்திர ஆட்டத் திருநாளுக்காகஅக்.30-ஆம் தேதி நடைதிறப்பு.

by Editor / 11-10-2024 11:00:30pm
சபரிமலையில்  சித்திர ஆட்டத் திருநாளுக்காகஅக்.30-ஆம் தேதி நடைதிறப்பு.

திருவிதாங்கூர் மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக அக்.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதானத்தில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் ஸ்பாட் புக்கிங் முறை குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் ஆரம்பமாக உள்ளநிலையில், ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஸ்பாட் புக்கிங் முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது. 

 

Tags : சபரிமலையில்  சித்திர ஆட்டத் திருநாளுக்காகஅக்.30-ஆம் தேதி நடைதிறப்பு.

Share via
Logo