ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துங்கள்: போலீஸாருக்கு ஆணையர் உத்தரவு

by Staff / 03-10-2023 01:35:55pm
ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துங்கள்: போலீஸாருக்கு ஆணையர் உத்தரவு

போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் முதல் இணை ஆணையர்கள் வரையிலான போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர். சுதாகர் ஆலோசனை வழங்கினார். அப்போது, அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சாலைகளில் ஒழுங்கற்று சென்றால் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும். பேருந்துகள், அவர்களுக்கான நிறுத்தத்தில் நின்றுசெல்லும் வகையில் தனிப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணியால் சாலைகள் குறுகலானால், அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். போக்குவரத்து போலீஸார் லஞ்சம் வாங்கினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், நெரிசலுக்கு நிரந்ததீர்வு காணும் வகையில் போக்குவரத்து காவலில்படிப்படியாக தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளனஎனவும் கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories