மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் சேவை மாற்று பாதையில் இயக்கம்.

by Staff / 30-06-2025 06:42:29pm
 மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் சேவை மாற்று பாதையில் இயக்கம்.


மதுரை கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ள நிலையில், மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலானது வருகின்ற ஜூலை மாதம் 2-ம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 அதன்படி, மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டைக்கு வருகின்ற ஜூலை மாதம் 2-ம் தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை- செங்கோட்டை ரயிலானது வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக செல்லும் மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியே செல்லாது எனவும், அதேபோல், தற்போது மாற்று வழியில் இயக்கப்படும் பாதையில் உள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Mayiladuthurai-Sengottai train service operating on alternate route due to maintenance work.

Share via