எந்த கட்சியுடன் கூட்டணி: ராமதாஸ் விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், அதிமுக, திமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசி வருவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. பாமகவின் செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணியை முடிவு செய்யும் என்றார். மேலும், ஆக., 10ல் பூம்புகாரில் மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
Tags :