பணமோசடி செய்த நிகிதா.. எஃப்ஐஆர் தகவல் வெளியானது

சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா மீது பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா. இவர் மருத்துவர் அல்ல என்பதும் பி.எச்.டி முடித்து அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்ததும் தெரியவந்துள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
Tags :