பேரனை கண்டித்த மாமியார் மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றிய மருமகள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஓகைப் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சாரதா(29). இளையராஜா விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இளையராஜாவின் தந்தை உயரிழந்த நிலையில் தாய் அங்காளம்மை(70) மனைவி மற்றும் குழந்தைகளுடன் இளையராஜா ஒகைப் பேரையூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சாரதாவின் மகனை பாட்டி அங்காளம்மை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாரதா மாமியாரான அங்காளம்மையிடம் என் மகனை நீ எப்படி கண்டிக்கலாம் என்று கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து அங்காளம்மை மீது ஊற்றியுள்ளார்.
இதில் அங்காள ம்மையின் முகம் காது தாடை மார்பு போன்ற இடங்களில் தீக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அலறித் துடித்த அங்காளம்மையை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாரதாவை கைது செய்துள்ளனர்.
Tags : பேரனை கண்டித்த மாமியார் மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றிய மருமகள்.