கஞ்சா போதையில் நண்பனை கழுத்தறுத்து கொலைசெய்த நண்பன்.
திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 24.அரசங்குளம் தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் வயது 22 அழகிரி காலணி பகுதியைச் சேர்ந்த சதீஷ் வயது 27 ஆகிய மூவரும் திருவாரூர் தியாகராஜ கோயிலுக்கு சொந்தமான கமலாலயக்கரையில் அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர்.இதில் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சதீஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விளமல் பகுதிக்கு சென்று அரசு மதுபான கடையில் மது அருந்தி விட்டு திரும்பி வந்து அதே இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகை மணிகண்டன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ரத்தம் படிந்த கத்தியுடன் நடந்து சென்று திருவாரூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Tags : கஞ்சா போதையில் நண்பனை கழுத்தறுத்து கொலைசெய்த நண்பன்



















