"நாணயத்தில் இந்தி உள்ளது என இபிஎஸ் கூறியது தேசவிரோதக் குற்றமா?"

by Staff / 20-08-2024 03:46:51pm

நாணயத்தில் இந்தி உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது தேசவிரோதக் குற்றமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார், நாணய வெளியீட்டுக்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த திமுக. முதலமைச்சரின் பேச்சு திமுக - பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவை திமுக எதிர்ப்பது போலியானது என்பது தெரியவந்துள்ளது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

Tags :

Share via