போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில்  ஐநா அமைதிப்படை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

by Admin / 19-04-2026 11:42:00am
 போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில்  ஐநா அமைதிப்படை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

இஸ்ரேல் மற்றும் லபனான் இடையே அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில்  ஐநா அமைதிப்படை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில்  பிரஞ்சு வீரர் கொல்லப்பட்டடாா்.. ஏப்ரல் 18 அன்று தெற்கு லெபனானின் கந்தூரியா கிராமத்தின் அருகே சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த யுனிபைல் ரோந்து படை நம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஒரு பிரஞ்சு வீரர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது .பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பை காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் ஹிஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தெற்கு லெபனானில் இருந்து வெளியேறிய மக்கள் மெதுவாக தங்கள் பகுதிகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும் எல்லையில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டை தொடர்வதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு லேபனான் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo