சென்னை மாவட்டத்திற்கான சென்னை சூப்பர் சிக்ஸ் திமுக வாக்குறுதியை வெளியிட்டார், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
இன்று சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றும் நோக்கில் சென்னை மாவட்டத்திற்கான சென்னை சூப்பர் சிக்ஸ் என்ற தனிநிலை தேர்தல் அறிக்கை வெளியிட்டார், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
பூங்காக்கள் விளையாட்டு திடல்கள் மற்றும் பொது இடங்களை நவீனமயமாக்குதல் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
கடைசி மைல் வரை இணைப்பை வழங்க ஆயிரம் மினி பேருந்துகள் அறிமுகம் மற்றும் போக்குவரத்து நெரிசலை 25 சதவீதம் குறைக்க ஏஐ தொழிநுட்பம் சார்ந்த போக்குவரத்து மேலாண்மையை உருவாக்குதல்.
மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை 2028க்குள் முடித்தல்.
சென்னை வழிபட்ட சாலை 800 முதல் பூஞ்சேரி வரை 2027க்குள் முடிக்கப்படும்.
தெரு நாய்களில் எண்ணிக்கை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்கள் எண்ணிக்கையை மும்மிடமாக உயர்த்துதல்.
ஏஐ அனிமேஷன் மற்றும் கேமிங் துறைகளில் பத்தாயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.இதன் மூலம் 20,000 பேருக்கு உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் ..
இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும் சர்வதேச நிறுவனத்தின் இணைக்கவும் புதிய தளத்தை உருவாக்க குளோபல் டேலண்ட் கேட்டுவே உருவாக்கப்படும்..
மெட்ரோ குடிநீர் வசதி இல்லாத இடங்களுக்கு ஆர்வோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்படும்.
உயர் ஒளி திறன் கொண்ட மின் விளக்குகள் அமைக்கப்படுபடும்...
கலை, இசை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்காக புதிய உள்ளரங்க கலாச்சார மையம் உருவாக்கபடும்என வெளியிட்டாா்.. . முக்கிய ஆறு வாக்குறுதிகள்.
Tags :



















