தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில்-திறந்த வாகனத்தில் பொதுமக்கள் இடையே வாக்கு சேகரித்தார் ,

by Admin / 19-04-2026 04:35:11pm
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில்-திறந்த வாகனத்தில் பொதுமக்கள் இடையே வாக்கு சேகரித்தார் ,

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமான மூலம் திருச்சி வந்தடைந்து அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை, கேகே நகர் பேருந்து நிலையம், கூட்டப்பட்டு போன்ற முக்கிய இடங்களில் பொதுமக்கள் இடையே வாக்கு சேகரித்தார் ,பின்னர் அவர் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறிது நேரம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்., விஜய் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக பொதுச் செயலாளர் என். ஆனந்த் இதய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் விஜய்க்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை பெரம்பூர்-திருச்சி கிழக்கு இரு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் பெரம்பூரில் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் முன்பாக வீசில் சின்னத்தை கோலமிட்டு ... பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo