படகு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியா

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தியாயின் வெற்றி கணக்கில் மேலும் ஒரு பதக்கம் சேர்ந்துள்ளது. பாய்மரப் படகு போட்டியில் இந்தியாவை சேர்ந்த நேஹா தாக்கூர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 'ILCA-4' பிரிவில் 11 பந்தயங்களுக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
Tags :