திமுக சார்பில் தஞ்சாவூரில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்

by Admin / 31-07-2026 12:16:03am
திமுக சார்பில் தஞ்சாவூரில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்

திமுக சார்பில் தஞ்சாவூரில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் காலை 10.00 மணி அளவில் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட தவறியதாக கூறப்படும் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து மேகதாது அணை விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்காமல் இருப்பது தொடர்பாகவும் பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக கூறி விவசாயிகளை ஏமாற்றியது மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அத்துடன் டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாக சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும் குறுவை சாகுபடி பாதிப்பிற்கு ஏக்கருக்கு 25,000 இழப்பீடு, காப்பீட்டு தொகை மற்றும் விவசாயஇடுபொருளுக்கு மானியம் தொகை போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகள் மற்றும் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் தஞ்சாவூரில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
 

Tags :

Share via

More stories

Logo