தமிழக முதலமைச்சர் விஜய் மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீடு விவாகரங்கள் தொடர்பாக கர்நாடகவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது
தமிழக முதலமைச்சர் விஜய் மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீடு விவாகரங்கள் தொடர்பாக கர்நாடகவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநில முதலமைச்சர்களும் தனித்தனியாக காவேரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவது தவறாகும். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும். 50 ஆண்டுகால போராட்டத்தின் மூலம் பெற்ற சட்டபூர்வ உரிமைகளை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடகா அரசிடம் இழந்து விடக்கூடாது என்றும் வேகதாதிவில் அணை கட்டுவதற்கான பின்புற கதவை கர்நாடகம் திறந்து வைத்திருக்கிறது. அவற்றில் தமிழக முதலமைச்சர் சிக்கிவிடக்கூடாது என்றும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி திட்டமிட்டபடி முதலமைச்சர் விஜய் கர்நாடக சென்றால் அவர் திரும்பி வரும்போது கர்நாடக முதலமைச்சரை தமிழகத்திற்கு அழைத்து வந்து டெல்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியை காண்பிக்க வேண்டும் என்றும் இதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசு அறிக்கை வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் பி ஆர் பாண்டியன் தம் எதிர் கருத்தை வெளியிட்டுள்ளார்.
Tags :


















