சுடுநீர் எப்படி குடிக்க வேண்டும்..எப்படி குடித்தால் நம் உடலுக்கு நல்லது..

by Editor / 13-03-2022 08:55:03pm
சுடுநீர் எப்படி குடிக்க வேண்டும்..எப்படி குடித்தால் நம் உடலுக்கு நல்லது..

மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் இன்றி அமையாத ஒன்று...ஆனால் அதை முறையாக எடுத்தால் பல நோய்கள் வருவதை நம்மால் தடுக்க முடியும்

3 வகையாக நாம் தண்ணீர் குடிக்கலாம்

1.சுடுநீர்
2.குளிர்ந்த நீர்
3.சாதாரண நீர் (பச்ச தண்ணீர்)

1.சுடுநீர் 

தினசரி நாம் 3-4 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும் அதில் 2 லிட்டர் தண்ணீர் சுடுநீராக தான் இருக்க வேண்டும்

சுடுநீராக மட்டுமே குடிக்க வேண்டும்,அதை ஆறிய பிறகு குடிப்பதால் சுடுநீரின் நன்மைகள் நம்மால் பெறமுடியாது

சுடுநீர் உணவுக்கு முன்னும் பின்னும் அவசியம் குடித்து வந்தால் எளிதில் ஜீரணம் ஆகும்

2.குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் (Ice water) பொறுத்த வரை காலை மற்றும் மதியம் மட்டுமே குடிக்க வேண்டும்,இரவில் குடிக்க கூடாது இது சளி,தும்மல் ஏற்படுத்தும்

குளிர்ந்த நீர் உடல் சூட்டை அதிகரிக்கும் ஆகையால் அதிகம் தவிர்ப்பது நல்லது குளிர்ந்த நீரால் உடலுக்கு எந்த பயனும் இல்லை,கெடுதல் தான்

3.சாதாரண நீர் (Normal water)

வெறும் வயிற்றில் நாம் அவசியம் தினமும் குடிக்க வேண்டியது,உடலை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு சாதாரண நீருக்கு மட்டுமே உள்ளது சுடுநீர் அதிகம் எடுத்து கொண்டு சாதாரண நீர் குறைவாக குடித்தால் உடல் எடை வெகுவாக குறையும்

கவனத்தில் கொள்ள வேண்டியது:

சுடுநீரை சூடாக இருக்கும் போது தான் குடிக்க வேண்டும்,அதிக சூடு கூடாது

ஒரு முறை சூடு செய்து உடனே குடியுங்கள் ஆறிய பிறகு மீண்டும் மீண்டும் சூடு செய்தால் மினரல் சக்திகள் அழியும்

சுடுநீர் குடிக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது தவற வேண்டாம்

வெளி இடங்கள் சென்று தண்ணீர் குடித்தால் மட்டும் அடைத்துவைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கவும் மற்ற நேரங்களில் பூமியில் இருந்து கிடைக்கும் சுத்தமான நீர் தான் உடலுக்கு அனைத்து நன்மையும் கொடுக்கும்.


நம் வீட்டில் இருக்கும் pore அல்லது வீட்டில் உள்ள அடிபம்பு தண்ணீரே மிகச்சிறந்த தண்ணீர் அதை அப்படியே குடியுங்கள் அது மிகவும் நல்லது. ஆனால் நகரங்களில் மட்டும் அந்த pore மற்றும் அடிபம்பு தண்ணீரை அப்படியே குடிக்க வேண்டாம் அதை நன்கு சூடுபடுத்தி வடிகட்டி குடியுங்கள். ஏனெனில் நகரங்களில் வீட்டின் முன் சாக்கடை இருக்கும் மற்றும் நம் போர் அருகிலே பக்கத்தில் உள்ள வீட்டின் செப்டிக் டேங்க் இருக்கும் ஆகவே சுகாதார முறையில் இருக்காது ஆகவே நன்கு சூடாக்கி குடியுங்கள்

   கேன் வாட்டர் தண்ணீர் சுவையாக இருப்பதற்கு தண்ணீரில் நிறைய கெமிக்கல் சேர்க்கிறார்கள். கேன் தண்ணீர் சுவையாக இருப்பதற்கு காரணம் செயற்கை முறையில் தான் என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்

நம் மண்ணில் விளையும் பொருட்களில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு கொழுப்பு என்று தவறான மாயை உருவாக்கி விட்டு இன்று அவர்கள் கொடுக்கும் எண்ணெய் வாங்கி சாப்பிட்டு விட்டு நோய்கள் அதிகமாகிறதோ அதை போல் தான் தண்ணீரையும் நாம் வாங்கி குடித்து விட்டு பின்னர் அதன் விளைவுகளைக் நாம் தான் அனுபவிக்க வேண்டும்

Packed waters அதாவது கேன் தண்ணீர் எலும்பு தேய்மானம் கொடுக்கும் என்பது உறுதி... தவிர்க்கலாம்


    தொகுப்பு *மா.செல்வக்குமார்

 

Tags :

Share via