அமெரிக்க துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

by Staff / 25-05-2022 04:04:47pm
அமெரிக்க துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியில் 18 வயது இளைஞனால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 19 சிறுவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். டெக்சாஸ் ராப் துவக்கப்பள்ளியில் கைத்துப்பாக்கி மற்றும் ரைபிலுயுடன்  நுழைந்த சல்வாரோட ராமரோஸ்  என்ற இளைஞர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 19 சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு முன் அந்த இளைஞர் துப்பாக்கியுடன் கூடிய புகைப்படங்களை ஒரு பெண்ணுடன் பேக் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பாட்டியும் கொலையாளி சுட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

.ஏறக்குறைய ஒருநூற்றாண்டில்  மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடு  நாட்டின் சமீபத்திய பயங்கரமான தருணம். .கொல்லப்பட்ட இரண்டு பெரியவர்களும் ஆசிரியர்கள்

சில மணிநேரங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய அதிபா் ஜோ பிடன், அமெரிக்காவில் உள்ள மக்களை நாட்டின் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த துப்பாக்கிகலாச்சாரதிற்கு எதிராக நிற்குமாறு வலியுறுத்தினார்.சனிக்கிழமைவரை  தினமும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட பிடென் உத்தரவிட்டார் அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை ஒரு பிரச்சனையாக உள்ளது, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகக்௯றினாா்.

 

Tags :

Share via