மூதாட்டி கொடூர கொலை

by Staff / 21-03-2023 05:04:54pm
மூதாட்டி கொடூர கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முன்ஷிகஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹரிஹர்பூர் கிராமத்தில் வசித்து வரும் கோட்கர் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூதாட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories