அரசு பள்ளி மாணவர் மீது பக்கவாற்று சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது

by Admin / 17-12-2025 11:15:51am
 அரசு பள்ளி மாணவர் மீது பக்கவாற்று சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது

 திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சரத்குமார் என்பவரின் மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவர்அரையாண்டு தேர்வு முடிந்து மதிய உணவு  பள்ளியின் தரைத்தளத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது பக்கவாற்று சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது. உடனடியாக மாணவர்களும் ஆசிரியர்கள் மாணவன் மோகத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பொழுது அங்கு மருத்துவர் பரிசோதித்து மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று சொல்ல மாணவர்களின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் முன்பாக கூடி மாணவனின் உயிர் போவதற்கு காரணமான பள்ளியின் பராமரிப்பு குறைபாடு காரணம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு,மாணவன் இறப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவருடைய அப்பாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பள்ளியின் முன்பாக உறவினர்களும் பொதுமக்களும் திரண்டு நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவனின் பெற்றோர்களிடம் உறவினரிடம் சமரசம் பேசி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

 

 

Tags :

Share via