மகளிர் உரிமைத் தொகை - பரிசோதனை முயற்சி தொடங்கியது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.06 கோடி பயனாளர்களுக்கு ரூ.1,000 வழங்கவுள்ள நிலையில் பரிசோதனை முயற்சி தொடங்கி நடந்து வருகிறது. தகுதிவாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மகளிர் உரிமைத் திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















