பிரதமரிடம் விளக்கம் கேட்க பயப்படும் தேர்தல் ஆணையம் திருமாவளவன்

பிரதமர் மோடி அண்மை நாட்களாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய விவகாரத்தில் அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி அவருக்கு அனுப்பாமல் நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று புரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
Tags :