தன்பாலின திருமண வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு

by Staff / 17-10-2023 10:33:31am
தன்பாலின திருமண வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்குகள் மீது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, இது தொடர்பான முந்தைய வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

 

Tags :

Share via