சிங்கப்பூருக்கான விமான சேவையை  நிறுத்த வேண்டும்:  கெஜ்ரிவால் வலியுறுத்தல்

by Editor / 18-05-2021 04:22:16pm
சிங்கப்பூருக்கான விமான சேவையை  நிறுத்த வேண்டும்:  கெஜ்ரிவால் வலியுறுத்தல்



கொரோனாவின் புதிய வகை மாறுபாடு குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்ற கவலையின் மத்தியில் சிங்கப்பூருடனான விமான தொடர்பை முழுமையாக நிறுத்துமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
இன்று பிற்பகல் பகிரப்பட்ட ஒரு ட்வீட்டில், குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
'சிங்கப்பூரில் தோன்றியுள்ள கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும். மத்திய அரசிடம் எனது வேண்டுகோள்: 1. சிங்கப்பூருடனான விமான சேவைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட வேண்டும் 2. குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்." என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் வகைகள் கடந்த கால மாறுபாடுகளை விட அதிகமான குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிங்கப்பூர் ஏற்கனவே அனைத்து பள்ளிகள், முதன்மை மற்றும் இடைநிலை கல்வி நிறுவனங்களை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர் முதல் டிசம்பர் வரை வரவிருப்பதாகவும், இது குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நிலைமையைக் கையாள சரியான உத்திகளுடன் தயாராக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via