சிறுமி கொலை - சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்

by Editor / 09-06-2025 01:52:35pm
சிறுமி கொலை - சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்

ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் எல்லையில் சந்தாபுரம் பகுதியில் கடந்த மாதம் 21ஆம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இளம்பெண் சூட்கேஸில் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2 பீகார் இளைஞர்கள் சிறுமி அடைக்கப்பட்டிருந்த சூட்கேஸை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஆஷிக் குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via