உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்குவங்கத்தில் உள்ள லிலுவா ரயில் நிலையம் அருகே இன்று (மே 28) உள்ளூர் ரயில் தடம் புரண்டது. ஷியோராபுலியிலிருந்து ஹவுராவுக்கு காலியான உள்ளூர் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் தடம் புரண்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது ஊழியர்கள் தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
Tags :