மேற்கு வங்க முன்னாள் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மூச்சு திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்ததேப் பட்டாசார்ஜி-க்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பார்வையாளர்களிடம் பேசுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :



















