திருவண்ணாமலை 10 ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை-இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.

by Staff / 25-10-2025 11:44:40pm
திருவண்ணாமலை 10 ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை-இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோனையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(30) கூலி தொழிலாளியான இவர், கடந்த 2023ம் ஆண்டு,  14 வயதான பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பின் தொடர்ந்து கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் 2023ம் ஆண்டு புகார் அளித்துள்ளார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.காஞ்சனா,சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளி செல்வராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கிட பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரையுமே கைது செய்த காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  ஒரே நாளில் இரண்டு போக்சோ வழக்கிற்கு தீர்ப்பு அளித்ததால் நீதிமன்ற வாசலில் பரபரப்பு காணப்பட்டது.
 

 

Tags : திருவண்ணாமலை 10 ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை-இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.

Share via

More stories

Logo